இடைத் தேர்தல் வெற்றி – நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் பாஜகவை வெற்றி பெற வைத்ததற்காக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வெறு மாநிலங்களில் 3 மக்களவைக்கும், 7 சட்டப்பேரவைகளுக்கும் நடைபெற்ற…

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் பாஜகவை வெற்றி பெற வைத்ததற்காக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வெறு மாநிலங்களில் 3 மக்களவைக்கும், 7 சட்டப்பேரவைகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியை பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் எம்பிக்களாக இருந்த அகிலேஷ் யாதவும், ஆசம் கானும், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதனால், அந்த இரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

இந்த 2 தொகுதிகளிலும், பாஜக வெற்றி பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவின் தொகுதியாக இருந்த ஆசம்காரில் பாஜகவின் தினேஷ் லால் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். ராம்பூரில் பாஜகவின் கான்ஷியாம் லோதி வெற்றி பெற்றுள்ளார்.

 

இந்த 3 மக்களவைத் தொகுதிகள் இல்லாமல், ஆந்திரப்பிரதேசம், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், திரிபுராவில் 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது.

இதில், திரிபுராவில், முதலமைச்சர் மாணிக் சுகா தான் போட்டியிட்ட போர்டோவாலி தொகுதியில் வெற்றி பெற்றார். இதேபோல், பாஜகவின் மலினா தேப்நாத் ஜூபராஜ்நகர் தொகுதியிலும், ஸ்வப்னா தாஸ் பால் சுர்னா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவைத் தொகுதிகளலும் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

ஆசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவைத் தொகுதிகளில் கிடைத்திருக்கும் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, மத்திய – மாநில அரசுகளின் இரட்டை இன்ஜின் அரசுகளுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது என கூறியுள்ளார்.

இதேபோல், திரிபுரா முதலமைச்சர் மாணிக் சஹா உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் மூவரை வெற்றி பெற வைத்ததற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயல்படக் கூடியதாக பாஜக அரசுகள் இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.