வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி! வாக்கு வித்தியாசம் குறைந்தது!

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.  இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு…

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார். 

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன.  இதில் பாஜக தலைமையிலா தேசிய கூட்டணி 297 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்தியா கூட்டணி 229 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றிப் பெற்றுள்ளார்.  சென்ற முறை 5 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நிலையில்,  தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிப் பெற்றுள்ளார்.  காலையில் இரண்டு சுற்றுகள் வரை பின்னடைவில் இருந்த மோடி போகப் போக வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்து தற்போது வெற்றிப் பெற்றுள்ளார்.

வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி போட்டியிட்டு,  வெற்றிப் பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.