ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேட்டோ – ரஷ்யா…

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி, வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேட்டோ – ரஷ்யா இடையிலான பிரச்னைக்கு அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் கவலைகள் குறித்தும் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி உணர்த்தியுள்ளார். உக்ரைனிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இந்தியாவுக்குத் திரும்புவதற்கும் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஸ்லோவாக்கியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இவான் கார்கோக்- உடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஸ்லோவாக்கியா சாலை வழியாக வெளியேற்றுவதற்கு உதவிட வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ருமேனியா நாட்டு எல்லை வழியாகவும இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.