ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காகச் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பில் இரு நாடுகளுடயிலான வா்த்தகம், முதலீடு மற்றும் எல்லைப் பிரச்சனை ஆகியவை குறித்து பிரதமா் நரேந்திர மோடி விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று , குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







