பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் இன்று ரஷ்யா புறப்படுகிறார்.
இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாஸ்கோவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல முக்கிய உலகப் பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடு பற்றியும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்தும் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து ஆஸ்திர்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.







