இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக உஸ்பெகிஸ்தானுக்கு புறப்பட்டார்.

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றார். இதனைத்தொடர்ந்து கிர்கிஸ்தான் குடியரசுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோட, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிரதமர் அதிபர் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவார். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் மக்கள் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்து, எதிர்காலத்திற்கான செயல்திட்டத்தை வகுப்பார்கள்.

மேலும், தாஷ்கண்டில் உள்ள சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் மாநில கீழைத்தேய ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உள்ள மகாத்மா காந்தி மையம் ஆகியவற்றையும் பிரதமர் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிரதமர் அதிபர் மிர்சியோயேவுடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவார். இரு தலைவர்களும் ஆய்வு செய்வார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.