முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

எடப்பாடி பழனிசாமியிடம் சுமூக உறவு காட்டிட பிரதமருக்கு விருப்பமில்லை – முரசொலி நாளேடு

திமுக நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

திமுக நாளேடான முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அ.தி.மு.க. தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் பிடிக்கின்றன. இல்லையேல் ஆசை, ஆசையாக பிரதமரின் அனுக்கிரகத்தைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையுடன் டெல்லிக்கு ஓடிய பழனிசாமி அணியினருக்கு இத்தகைய மூக்குடைப்புச் சம்பவங்கள் நடைபெற்றிருக்குமா? என சுட்டிக்காட்டியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கடந்த முறை சென்னையில் அரசுத் திட்டங்கள் திறப்பு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி, எடப்பாடியுடன் எப்படி நடந்து கொண்டார் என்பதை எண்ணிப் பார்த்தால் அது விளங்கும்! சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி, தமிழக அமைச்சர் பெருமக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரை வரவேற்கக் காத்திருந்த தமிழக அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் தெரிவித்துவிட்டு விரைந்து சென்று அங்கு இருந்த எடப்பாடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்த காட்சி நினைவிருக்கலாம்.

 

அன்று அத்தனை முக்கியத்துவம் தந்த மோடி, அவரைத் தேடி டெல்லி வரை சென்ற எடப்பாடியை ஏறெடுத்தும் பார்க்காது, வணக்கம் தெரிவித்து கூப்பிய கரங்களோடு நின்றவரை கண்டும் காணாதது போல அவருக்கு அருகிலிருந்த அண்ணாமலையிடம் நின்று நிதானமாகப் பேசிடும் காட்சிகள் ஏடுகளில் வெளிவந்துள்ளன. அது ஒன்றே பிரதமர் மோடி எடப்பாடியிடம் சுமூக உறவு காட்டிட விரும்பாத நிலையை தெளிவாகக் காட்டியது.

பழனிச்சாமிக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பால் அவர் வேதனைப்பட்டாரோ இல்லையோ,அவரதுஆதரவாளர்கள் பலர் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வேலுமணி, வீரமணி, விஜயபாஸ்கர், ரமணா போன்றவர்கள் நொந்து போயிருப்பார்கள்! தங்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் ‘ரெய்டு’ கோடி, கோடியாக கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு, கிலோகணக்கில் தங்கம் வெள்ளி எல்லாம் – பிடிபட்டு வரும் நிலையிலும், குட்கா வழக்கு மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ள வேளையிலும் பழனிச்சாமி – பிரதமர் சந்திப்பின் மூலம் நிவாரணம் தேடலாம் என நினைத்திருந்தோருக்கு பேரிடியாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

 

டெல்லியின் கருணா கடாட்சம் எங்குள்ளதோ அங்கே தாவ பழனிச்சாமி தரப்பின் சில தலைகள் முடிவெடுக்கலாம்; இன்னும் பல தாவல் கூத்துகளை வருங்காலத்தில் காணலாம் எனத் தோன்றுகிறது. இதை எல்லாம் பார்க்கும் போது கவிஞர் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ்.பாடி எம்.ஜி.ஆர். வாயசைத்த, அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு? எனும் பாடல் வரிகள் தான் நம் நினைவுக்கு வருகிறது என முரசொலி நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் ஆவணங்கள் மாயமா ?

Web Editor

ஒரே நாளில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

மாணவி சத்தியாவின் நிலை இனி யாருக்கும் வரக்கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

EZHILARASAN D