ட்விட்டரில் லெஜண்ட் சரவணன்; 3 நாளில் 112K பாலோவர்ஸ்

ட்விட்டரில் இணைந்த லெஜண்ட் சரவணன், 3 நாளில் 112K பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார். லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில்…

ட்விட்டரில் இணைந்த லெஜண்ட் சரவணன், 3 நாளில் 112K பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.

லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘தி லெஜண்ட்’. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையைக் கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன் பெற்றிருக்கிறார். மேலும், இப்படம் குறித்து கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன் கூறுகையில், “என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார் என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும்” எனக் கூறி இருந்தார்.

அண்மைச் செய்தி: ‘பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!’

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் லெஜண்ட் சரவணன், சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் இணைந்தார். அவர் இணைந்த சில நாட்களில் 112K பாலோவர்ஸ் பெற்றுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாக இருக்கும் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு அவரின் பாலோவர்ஸ் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/yoursthelegend

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.