பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர் குமரி மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராகப் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரின் ஆபாச வீடியோக்கள், வாட்ஸ்-அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் சில பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்று வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், சில பெண்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அண்மைச் செய்தி: ’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி
இதுகுறித்து, பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். இதையடுத்து, பாதிரியாரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி தாயுமானவன் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 3ம் தேதி வரை பாதிரியாருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.