இன்று முதல் டாஸ்மாக் மதுபான விலை உயர்வு…!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில்…

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  “மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.  180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325மி.லி., 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.