ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா நாளை தமிழகம் வருகை!

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக நாளை தமிழ்நாடு வருகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் ஜூலை 18ஆம்…

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக நாளை தமிழ்நாடு வருகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா  அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 11 பேர் கொண்ட குழுவுடன் இன்று கேரளாவில் தனது பரப்புரையைத் தொடங்கியுள்ளார் யஷ்வந்த் சின்கா. இரண்டாம் நாள் பரப்புரை பயணமாக நாளை நண்பகலில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகின்றது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். நாளை மாலை 6 மணிக்கு செய்தியாளர்களையும் சந்திக்கவுள்ளார் யஷ்வந்த் சின்கா.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.