பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அந்த நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இன்று நடைபெறும் பாஸ்டீல் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று, பிரான்ஸ் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடிக்கு, பாரீஸ் நகரில் உள்ள ஓர்லி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார். அப்போது பிரதமர் மோடிக்கு இசைக்கலைஞர்கள் மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தப் பயணத்தின்போது மேக்ரானுடன், பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருநாட்டு உறவை முன்னெடுத்து செல்வது தொடர்பாக இருவரும் விவாதிக்க உள்ளனர்.
இங்கு போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் நாளை தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடமாட்டோம், ஒரு கணமும் வீணாக விடமாட்டோம் என்று இந்தியா தீர்மானித்துள்ளது. எனது ஒவ்வொரு நொடியும் நாட்டு மக்களுக்கானது என்று தீர்மானித்துள்ளேன்.காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உலகளாவிய விநியோக மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது – இவற்றில் இந்தியாவின் அனுபவம் உலகிற்கு உதவியாக உள்ளது. இந்தியாவும் பிரான்சும் நீண்ட காலமாக தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பது மிகச் சிலருக்கே தெரியும். இது சண்டிகரில் இருந்து லடாக் வரை விரிவடைந்தது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து எலிசி அரண்மனைக்கு மோடி சென்றார். அவரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடிக்கு அவர் விருந்தளித்தார். இதனைத்தொடர்ந்து அதிபர் இம்மானுவேல் பிரதமர்மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்ற விருதை வழங்கினார். இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







