இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தினால் 260 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் மணிப்பூர் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்றும் நாளையும் (டிச.11,12) மணிப்பூருக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,







