முக்கியச் செய்திகள் இந்தியா

ராணி எலிசபெத்தின் இறுதிசடங்கு முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் குடியரசு தலைவர்

லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று  டெல்லி திரும்பினார். 

இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில தினங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர் கடந்த 8ம் தேதி இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்தியாவில் எலிசபெத்தின் மறைவையொட்டி செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். அவர் ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியபின், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று டெல்லி வந்தடைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அன்புச் செழியன் வீட்டில் 24 மணி நேரத்தை கடந்து வருமான வரி சோதனை

Dinesh A

திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்

Halley Karthik

“கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு திட்டம் இல்லை!” – AICTE தலைவர்

Halley Karthik