அமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி – அதிபர் பைடன் அறிவிப்பு!

அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.  அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க…

அமெரிக்க கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

அமெரிக்க கடற்படைத் தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க கடற்படையில் 38 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மற்றும் இவர் தற்போதைய துணைத் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் அடுத்த இடத்தில் உள்ள லிசா ஃபிரான்செட்டியை கடற்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். பைடனின் இந்த முடிவு அமெரிக்க ராணுவத்தில் பாலின பிரதிநிதித்துவத்திற்காக குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த நியமனம் அந்நாட்டு செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். செனட் சபை இந்த நியமனத்திற்கு அனுமதி அளித்தால், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைவராக இருந்த அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க கடற்படையின் முதல் பெண் தளபதியாவார் என தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையில் வழிகாட்டும் ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை இயக்குதல் ஆகியவற்றில் லிசா ஃபிரான்செட்டி திறம்பட பணியாற்றி உள்ளார். பரந்த அளவில் மதிக்கப்படுபவர் மற்றும் ஆழ்ந்த நிபுணத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் மற்றும் சீனாவின் அதிகரித்து வரும் பிரச்னையை சமாளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்நிலையில் அமெரிக்க கடற்படையின் பசிபிக் கடற்படையின் தற்போதைய தளபதியான அட்மிரல் சாமுவேல் பாப்பரோவை கடற்படை தளபதியாக தேர்ந்தெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் அதிபர் பைடனுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.