ரீ-ரிலீஸ் ஆகும் பிரேமம் திரைப்படம் – எப்போது தெரியுமா?

சாய் பல்லவி முதலில் நடித்த  மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதத்தில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா…

சாய் பல்லவி முதலில் நடித்த  மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதத்தில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேமம்’. இந்த திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசானது. இதுதான் நடிகை சாய் பல்லவியின் அறிமுக திரைப்படமாகும்.

அறிமுக திரைப்படத்தில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மலையாள மக்கள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்கள் மத்தியிலும் இந்த திரைப்படத்திற்கு தனி கவனம் கிடைத்தது. அந்த வகையில் இதே பெயரில் ‘பிரேமம்’ திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்; நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அனைவரும் நாளைக்குள் கைது செய்யப்படுவார்கள்” – திருப்பூர் எஸ்பி சாமிநாதன் தகவல்.!

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமான பல விஷயங்களை சேர்த்து இருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிரேமம் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.60 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது.

பல வெற்றிப் படங்கள் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு வரும் நிலையில்,முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாகிய பிரேமம் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.