‘பிரேமலு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கிரிஷ் இயக்கத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் நடிப்பில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம்…

கிரிஷ் இயக்கத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் நடிப்பில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இந்த படம் சமீபத்தில் தெலுங்கிலும் ‘பிரேமலு’ படம் வெளியானது. தொடர்ந்து, இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. ‘பிரேமலு’ திரைப்படம் இன்று தமிழிலும் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 29-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிரேமலு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.