பிரேமலு படத்தின் ‘மினி மகாராணி’ தமிழ்ப் பாடல் விடியோ!

பிரேமலு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மினி மகாராணி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில், விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் மமிதா…

பிரேமலு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மினி மகாராணி’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில், விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது.

இந்த படம் சமீபத்தில் தெலுங்கிலும் வெளியானது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்த திரைப்படம் இன்று (மார்ச் 15) தமிழிலும் வெளியானது. இந்த நிலையில், பிரேமலு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மினி மகாராணி’ பாடலின் வீடியோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.