பிரேமலு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்!… எப்போது தெரியுமா?

‘பிரேமலு’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்துடன் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மலையாள திரைப்படம் பிரேமாலு.  காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ள இந்த…

‘பிரேமலு’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்துடன் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மலையாள திரைப்படம் பிரேமாலு.  காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் உலக முழுவதும் ரூ.134 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த பிளாக்பஸ்டர் படத்தில்,  நஸ்லன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மேலும் நடிகர்கள்  ஷ்யாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்த படத்தை பாவனா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.  பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் மலையாளத்தை தாண்டி தெலுங்கில் சக்கை போடு போட்டது. இதனால்,  இதன் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இப்பொழுது,  இந்த திரைப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து,  இதுவரை அதிக வசூல் செய்த தெலுங்கு டப்பிங் செய்யப்பட்ட மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.  படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘Disney Plus Hotstar‘ பெற்றுள்ளது.  அதன்படி, இப்படம் வருகின்ற 12-ம் தேதி ஓடிடியில் மலையாளம்,  தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.