39 தொகுதிகளுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் – பட்டியலை வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள்…

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி மற்றும் கிருஷ்ண சாமியின் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிலதினங்களுக்கு முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.

அதிமுக தரப்பில் தேமுதிக-விற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து  அதிமுக – தேமுதிக இடையே மார்ச் 6ம் தேதி  2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் 4 மக்களவை தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முன்வந்ததாகவும் மாநிலங்களவை  தொகுதி மறுத்ததாகவும் தகவல் வெளியானது.  மேலும் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிக பொதுச்செயலாளார் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால் அதிமுக தேமுதிக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி  30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு கட்சியின் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.