மரணம் குறித்து பிரதாப் போட்ட கடைசி பேஸ்புக் பதிவு!

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் இன்று  காலமானார். பிரதாப் போத்தன் நேற்று பதிவிட்ட மரணம் குறித்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம்,…

பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் இன்று  காலமானார். பிரதாப் போத்தன் நேற்று பதிவிட்ட மரணம் குறித்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100 க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்துள்ளார். வெற்றி விழா, லக்கி மேன், மகுடம் என பல படங்களை இயக்கி உள்ளார். ஆயிரத்தில் ஒருவன், அமரன், படிக்காதவன் என பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இறுதியாக கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் நடித்திருந்தார். சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மூடு பனி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த என் இனிய பொன் நிலவே பாடல் இன்றுவரை பிரபலம். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பிரதாப் போத்தன் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதாப் போத்தன் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/pratap.pothen

 

இந்நிலையில், பிரதாப் போத்தன் நேற்று பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மரணம், வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை அவர் பதிவிட்ட நிலையில், இன்று பிரதாப் காலமானது அனைவரையும் அதிர்த்தியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பதிவு ஒன்றில், மரணம் என்பது நீண்டகாலங்களாக நாம் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எச்சில் விழுங்குவதால் ஏற்படுகிறது என்று ஜார்ஜ் கார்கலின் வரிகளைப் பகிர்ந்துள்ளார். இதேபோல, மற்றொரு பதிவில் சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள். அதை காதல் என்று அழைப்பாளர்கள் என நினைக்கிறேன் என ஏஏ மில்னேவின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்றொரு பதிவில் வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களை செலுத்தியே கழிந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுகளை தற்போது நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  நேற்று மாலை வரை பிரதாப் போத்தன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த நிலையில், இன்று அவரது இறப்புச் செய்தி திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.