அரசியல் கட்சி தொடங்கும் தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர்!

பிரபல தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ஜான் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.  பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் ஆலோசகரும், …

பிரபல தேர்தல் வியூக கணிப்பாளர் பிரசாந்த் கிஷோர் தனது ஜான் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். 

பீகார் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் ஆலோசகரும்,  தேர்தல் வியூக கணிப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தனது இயக்கமான ஜான் சுராஜை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளார்.  இது குறித்து பேசியுள்ள அவர்,

“பீகாரில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ஜேடி, ஜேடியு,  பாஜக போன்ற கட்சிகளை விடுத்து புதிய மாற்றத்தை விரும்புகின்றனர்.  இதற்கு காரணம் கடந்த 30 ஆண்டுகளாக இந்த 3 கட்சிகளாலும் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. அனைவரும் துன்பத்தில் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் தலைவர்களுக்கு கட்சியை எவ்வாறு வழிநடத்துவது, தேர்தலில் எவ்வாறு வெற்றிப் பெறுவது போன்ற ஆலோசனைகளை வழங்கினோம். கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு செய்த வேலையை தற்போது மக்களுக்காக செய்கிறோம்.  எனது அறிவுரை பல தலைவர்களை வெற்றிப் பெற செய்தது.  அவர்களின் பிள்ளைகள் வெற்றிப் பெற்றார்கள்.  இப்போது,  ​​எனது ஆலோசனையால் பீகார் மக்கள் வெற்றி பெறுவார்கள்.  அவர்களின் வாழ்க்கை மேம்படும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று தனது இயக்கமான ஜான் சுராஜை (பொது நல்லாட்சி) அரசியல் கட்சியாக மாற்றுகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.