இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்ட புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் அதன் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. நிலவை நெருங்கி வரும் சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் சந்திரயானின் பயணம் வெற்றியடைவதை உற்றுநோக்கி காத்திருக்கின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி வில்லனாகவும், பல குணச்சித்திர வேடங்களிலும், மேலும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். அவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
BREAKING NEWS:-
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னுடைய X பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் என பதிவிட்டு, நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என குறிப்பிட்டு, ஒருவர் டீ ஆத்தும் படியான கார்ட்டூன் இமேஜை பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.







