தமிழகம்செய்திகள்

மக்களை காப்பாற்ற கொடிய விஷம் கொண்ட பாம்பினை பிடித்த முதியவருக்கு குவியும் பாராட்டு!

கரூர் அருகே பொதுமக்களை காப்பாற்ற கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பினை பிடித்து முதியருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கரூர் அடுத்துள்ள வெங்கமேடு விவிஜிநகர் பகுதியினை சார்ந்தவர் லோகநாதன் (வயது60). இவர் தனது வீட்டின் அருகே உள்ள பூங்குயில் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சந்தில் விஷம் கொண்ட விரியன் பாம்பு இருந்ததை கண்டறிந்து மக்களை காப்பாற்றும் வண்ணம் தானாகவே பாம்பு பிடி வீரராக மாறி, சுமார் 20 நிமிடமாக போராடி அந்த பாம்பினை லாவகமாக பிடித்து அதனை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பாம்பு சுவாசிப்பதற்காக, அந்த பிளாஸ்டிக் டப்பாவில் துவாரங்கள் அமைத்தார். பின்னர் அந்த பாம்பை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முற்பட்டர். கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்க முற்பட்ட போது, காவலர்கள் ஒரே கூச்சல் போட்டனர். பின்னர் கரூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்திற்கு சென்று கொடுக்க முற்பட்ட போது, அங்கே முறையாக பதில் இல்லாததோடு, இதை ஏன் ? தூக்கி கொண்டு அலையிறீங்க எங்கேயோ தூக்கி போட்டு சென்று விடலாம் அல்லவா என்று பதில் சொல்ல, உடனே பாம்பு உயிர் முக்கியம் ஆகவே, அதை முறையாக காட்டில் விட வேண்டுமென்பதே லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

பின்பு ஊடகத்துறையினருக்கு போன் செய்த போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்
தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள வனசரக அலுவலகத்திற்கு சென்று
ஒப்படைத்தார். பாம்பு உயிர் முக்கியம் மற்றும் மக்களின் உயிர் அதை விட முக்கியம் என்ற காரணங்களால் தானே பாம்பு பிடி வீரரராக மாறி, அதுவும் டிஸ்கவரி சேனலை பார்த்து பாம்பு பிடி வீரராக மாறி கரூர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற லோகநாதன் கொண்டு சென்ற பாம்பினை கடைசியில் வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றுபவரிடம் ஒப்படைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அயோத்தி ராமர் கோயிலுக்கு 28 மொழிகளில் பெயர் பலகை வைக்கும் மாவட்ட நிர்வாகம்!

Web Editor

’இந்திய பொருளாதாரத்தின் இருண்ட காலம்’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

Halley Karthik

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Gayathri Venkatesan

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading