தென் அமெரிக்காவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5ஆக பதிவாகியுள்ளது. தென் அமெரிக்காவின் டிரேக் பாஸேஜ் பகுதியில் நிலநடுக்க ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10.8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பசிபிக் சுமானி எக்காரிகை மையம், டிரேக் பாஸேஜ் நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் கடற்கரையில் அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி அலைகள் எழலாம் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.







