வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு!

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் கராகசுக்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜூலியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.2ஆக பதிவாகியுள்ளது.

7.8 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கம் 7.8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும், அண்டை நாடான கொலம்பியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் அங்கிருந்த மக்கள் உடனே வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும், இரு நாடுகளிலும் உயிரிழப்பு பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை. இதனை தொடர்ந்து ஜூலியா மாகாணத்தில் 3.9 மற்றும் பரினாஸ் மாகாணத்தில் 5.4 என்ற அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.