‘வலிமை’ வெளியீடு ஒத்திவைப்பு

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருந்த நிலையில் தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி…

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருந்த நிலையில் தற்போது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ‘வலிமை’ படத்தின் விசில் தீம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’, ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல்கள் வெளியாகி பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், யுவன் பிஜிஎமில், தீம் மியூசிக் மிரலவைக்கும்படியாக அமைந்துள்ளது.

நீண்ட நாட்களாக காத்திருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, இன்னும் கொஞ்சம் தூண்டும் வகையில், பல்வேறு தோற்றங்களில் நடிகர் அஜித் தோன்றுவது தீம்யை வெற்றியடைய செய்யலாம். தீம் வெளியான சில மணி நேரத்தில், சில லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக கடந்த டிச.30 அன்று வலிமை ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுக்க புத்தாண்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்தது. ட்ரெய்லர் வெளியாகி 30 நிமிடங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன நிலையில் திரையரங்குகளும் 50% எண்ணிக்கையுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிப்பை தவிர்க்கவும் வரும் 13ம் தேதி வெளியாக இருந்த வலிமை திரைப்பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே RRR திரைப்பட வெளியீடு ஒத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வலிமையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.