புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு – முழு விவரம் …!

தமிழ் நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.

தமிழ் நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் ஏற்கனவே முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் இருந்த நிலையில் இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் தவெக சார்பில் 21 பேரும், காங்கிரஸ் சார்பில் 2 பேரும் அமைச்சர்களாகினர்.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்னகவே இருந்த அமைச்சர்களுக்கு இடையே இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி,

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் பரிந்துரையின் பேரில் பின்வரும் அமைச்சர்களிடையே இலாகா ஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  1. C. ஜோசப் விஜய் – முதலமைச்சர் – பொதுத்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புறக் கடன் நிவாரணம், இளைஞர் நலம், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல்.
  2. N. ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் – ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், பாசனம், சிறு பாசனத் திட்டங்கள் உட்பட அனைத்துப் பாசனத் திட்டங்கள்.
  3. R. நிர்மல்குமார் – ஆற்றல் வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் – மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள்.

முதலமைச்சர் விஜயின் அவர்களின் பரிந்துரையின் பேரில், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்குக் கீழ்க்கண்டவாறு துறைகள் மற்றும் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

  1. ஸ்ரீநாத் ( தூத்துக்குடி) – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்
  2. கமலி. S (அவிநாசி) – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
  3. C. விஜயலட்சுமி (குமாரபாளையம்) – பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  4. R.V. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்) – வனத்துறை அமைச்சர்
  5. வினோத் (கும்பகோணம்) – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
  6. ராஜீவ் (திருவாடானை) – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
  7. பி. ராஜ்குமார் (கடலூர்) – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
  8. வி. காந்திராஜ் (அரக்கோணம்) – கூட்டுறவுத் துறை அமைச்சர்
  9. பி. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்) – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
  10. கே. ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) – சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
  11. எஸ். ராஜேஷ் குமார் (கிள்ளியூர்) – சுற்றுலாத் துறை அமைச்சர்
  12. எம். விஜய் பாலாஜி (ஈரோடு) – கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர்
  13. டி. லோகேஷ் தமிழ் செல்வன் (ராசிபுரம்) – வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர்
  14. ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம்) – போக்குவரத்துத் துறை அமைச்சர்
  15. ரமேஷ் (ஸ்ரீரங்கம்) – இந்து சமய அறநிலையத்துறை
  16. பி. விஸ்வநாதன் (மேலூர்) – உயர்கல்விதுறை (தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உட்பட)
  17. குமார். ஆர் (வேளச்சேரி) – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
  18. தென்னரசு. கே (ஸ்ரீபெரும்புதூர்) – வெளிவாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டோர் நலன்
  19. வி. சம்பத் குமார் (கோவை வடக்கு) – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
  20. முகமது ஃபர்வாஸ். ஜே (அறந்தாங்கி) – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
  21. டி. சரத்குமார் (தாம்பரம்) – மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
  22. என். மரிய வில்சன் (ஆர்.கே. நகர்) – நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை
  23. விக்னேஷ் கே (கிணத்துக்கடவு) – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.