#DulquerSalmaan உடன் இணையும் பிரபல தமிழ் நடிகர்? யார் தெரியுமா?

மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.  கடந்த…

மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தி வருகிறார்.  கடந்த 1999 ஆம் ஆண்டு, நடிகர் அஜித்தை டபுள் ஆக்ஷனில் நடித்த, ‘வாலி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக மட்டுமின்றி, வசூல்ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து குஷி, நியூ போன்ற பல படங்களை இயக்கினார். பின்னர், அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.  ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிரள வைத்தார்.  மாநாடு படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்தி நடிக்கும் ஆளுமையாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் வெளியான ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து, எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, வீர தீர சூரன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை நிகாஸ் ஹிதாயத் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஆக்சன் பின்னணியில் உருவாகவுள்ளதாகக் பேசப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.