தளபதி 67 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெள்ளையாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாரிசு கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள், தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அண்மையில் தளபதி 67 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.
Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥#Thalapathy67 🤜🏻🤛🏻 pic.twitter.com/4op68OjcPi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023
தளபதி 67 படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் உருவாகும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று படக்குழு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாகத் தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். எஸ் எஸ் லலித் குமார் தயாரிக்கிறார். மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜனவரி 2, 2023 அன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97
— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முந்தைய வெளியீடான ‘மாஸ்டர்’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைவதை இந்தத் திட்டம் குறிக்கிறது. கத்தி, மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தரின், ‘தளபதி 67’ படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இன்று தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் படக்குழுவினர் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பயணத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன், நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் நடிகர் சத்யராஜ் என ஏராளமானோர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
We feel esteemed to welcome @duttsanjay sir to Tamil Cinema and we are happy to announce that he is a part of #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/EcCtLMBgJj
— Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023
இந்நிலையில் தளபதி 67 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெள்ளையாகியுள்ளது. வரும் நாட்களில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.