முக்கியச் செய்திகள் விளையாட்டு

பொல்லார்ட் காயம் : பாக். தொடரில் இருந்து விலகல்

பாகிஸ்தானுக்கு எதிராக நடக்கும் தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லாட் காயம் காரணமாக விலகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 13 -ம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை இந்த தொடர் நடக்கிறது. இந்த நிலையில், அணியின் கேப்டன் பொல்லார்ட் தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். டி-20 உலகக் கோப்பைத் தொடரின் போது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து அவர் இன்னும் மீண்டு வரவில்லை.

இதனால், அவருக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் டேவன் தாமஸ் மற்றும் ரோவ்மேன் பவல் விளையாட உள்ளனர். ஒருநாள் போட்டிக்கு ஷாய் ஹோப்பும் டி-20 தொடருக்கு நிக்கோலஸ் பூரனும் கேப்டனாக செயல்பட உள்ளனர்.

நிக்கோலஸ் பூரன்

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

ஒருநாள் தொடர்: ஷாய் ஹோப் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், அகீல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிலிப், ரேமன் ரீஃபர், ரொமாரியோ தாமஸ், ஒடியன் தாமஸ், ஓடன் ஸ்மிபர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

டி20 தொடர்: நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), டேரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், அகேல் ஹொசைன், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஒடியன் தாமஸ், ஒடியன் ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

Advertisement:
SHARE

Related posts

சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்

Halley Karthik

கல்லணை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்!

சாத்தான்குளம் ஜெயராஜின் மகள் நீதிமன்றத்தில் சாட்சியம்

Jeba Arul Robinson