நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
VAU மீடியா என்டர்டெயின்மென்ட் வீரசக்தி தயாரிப்பில் தங்கர் பச்சன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாகவும், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவமேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘கருமேகங்கள் கலைகின்றன’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார். இதற்கான படப்பிடிப்பு கும்பகோணத்தில் பூஜையுடன் தொடங்கியது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் தனது மகன் விஜித் பச்சானை வைத்து ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது யோகிபாபுவை வைத்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற புதிய படத்தை தொடங்கியுள்ளார். பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவரின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








