முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பொன்னியின் செல்வன் பாடலுக்கு மூவ்மெண்ட் போட்ட ரஹ்மான்!

பொதுவாகவே பல சரித்திர மற்றும் புராணக்கதைகளை சினிமாவுக்கு ஏற்றவாறு மெறுகேற்றி திரைக்கதை அமைத்து படமாக்குவது மணிரத்ணத்தின் பாணி. மகாபாரதத்தின் கர்ணன் கதையை தளபதியாக வடித்தது, கருணாநிதி – எம்.ஜி.ஆரின் நட்பை பட்டி டிங்கரிங் பார்த்து ‘இருவர்’ படத்தை உருவாக்கியது, இராமாயணத்தைக்கொண்டு ‘இராவணன்’-ஐ எடுத்தது என பல்வேறு சாகசங்களை செய்துள்ளார் மணிரத்னம். மேற்சொன்ன படங்களில் தளபதியை தவிர மற்ற இரண்டு படங்களுமே வசூலில் சொதப்பியது.

இந்நிலையில் கல்கியின் புகழ் பெற்ற சரித்திர புணைவுக்கதையான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வைத்து மணிரத்னம் செய்யும் புதிய சாகசம் தான் ‘பொன்னியின் செல்வன். கல்கி, அதை தொடராக எழுதிய காலத்தில் இருந்தே அதிகமான வாசகர்களால் படிக்கப்பட்ட நாவல் அது.இலக்கிய எழுத்தாளர்கள் பலரும் மாங்கு மாங்குவென எழுதிய பல நாவல்களையெல்லாம் முந்து ஆயிரக்கணக்கில் பொன்னியின் செல்வன் பிரதிகள் விற்றுத்தீர்த்தன. எடுத்து வாசிக்கத் தொடங்கினால், கீழே வைக்க விடாத சுவாரஸ்யங்களும் திருப்பங்களும் பரபரப்பும் விறுவிறுப்பும் அந்த நாவலின் அதிசயம். அப்படிப்பட்ட நாவலை மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள் இந்நாவலன் வாசகர்க ரசிகர்கள். ஒருபக்கம் எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் இன்னொரு பக்கம் விமர்சனங்களும் குவிந்தவண்னம் தான் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழர்களான சோழர்களை வெள்ளைத்தோல்கொண்ட கதாப்பாத்திரங்களைக்கொண்டு காட்டுவதால் தமிழர்களின் ஆதி நிறம் புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. மேலும், இந்த புத்தகம் பலராரும் படிக்கப்பட்டுவிட்டதென்பதால் ஒவ்வருவருக்கும் அதில் வரும் கதைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் தொடர்பான கற்பனை அதிகமாக இருக்கும். மணிரத்தினத்தின் படம் அந்த கற்பனைக்கு தீணிபோடாமல் போனால் அவர்களின் மத்தியில் அது கடும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கத்தி மேல் நடப்பது போலான ஒரு சவாலினை செய்துகொண்டிருக்கிறார் மணிரத்னம் என்கிறனர் சினிமா ஆர்வலர்கள்.பல்வேறு திருப்பங்களுடன் பல்வேறு கதாப்பாத்திரங்களையும் நிறைய துணைக்கதைகளையும் கொண்டுள்ள இந்த நாவலை கொண்டு எடுப்படும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரப்பட்டாளங்கள் இதில் நடிக்கின்றனர். ஒவ்வொரு நடிகர்களும் நடிக்கவிருக்கும் கதாப்பாத்திரங்களை பற்றிய விவரங்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது படக்குழு. இந்நிலையில் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு எகிறியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

மணிரத்னத்தின் கடந்த பல படங்கள் பெரிதாக ஓடாததால் தற்போதைய மார்கெட்டில் அவர் பின் தங்கியே இருக்கிறார். இருப்பினும் பாகுபலி, கே,ஜி,எஃப் போன்ற பான் இந்தியா படங்களின் மாபெரும் வெற்றியை பார்த்து தமிழிலும் அதுபோலான ஒரு படம் வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ஆடியன்ஸிடம் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் அப்படமெல்லாம் உட்சநட்சத்திரங்களை தாண்டி திரைக்கதையின் வித்தையாலேயே மாபெரும் வெற்றி பெற்றது என்பதை நாம் மறுக்கமுடியாது. இந்நிலையில் ஏற்கனவே மக்களிடம் வரவேற்பு பெற்ற நாவலைக்கொண்டு எடுக்கப்படும் இப்படம் நிச்சயம் ஆடியன்ஸை ஏமாற்றாது என்றே கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு சுமாராகத்தான் ட்ரெண்ட் ஆனது. இருப்பினும் அந்த டீஸரில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை பற்றி பலரும் சிலாகித்து பேசினார்கள். இந்நிலையில் இப்படத்தின் சிங்கள் பாடல் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு. அந்த வீடியோவில் ரஹ்மான் இசையமைக்க ட்ரம்ஸ் சிவமணி பொறிபறக்க தாளம் அடிக்கிறார். அதை உற்சாகமாக கேட்டுக்கொண்டே ரஹ்மான் மூவ்மெண்ட் போட மணிரத்னம் அவற்றை கவனித்துக்கொண்டிருக்கிறார். இந்த காட்சிகளை பார்க்கும் போது கூடிய விரைவில் அந்த சிங்கிள் பாடல் வெளியாக அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் அல்லது மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதாக தெரியவில்லை என்றே கூறலாம்!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முன் விரோதம் காரணமாக பெயிண்டர் அடித்து கொலை; இருவர் கைது!

Niruban Chakkaaravarthi

“தலைமையை ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க வேண்டும்”: எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

Web Editor

திருவள்ளூரில் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழப்பு-விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

Web Editor