தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டது என பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கமலஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன் பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் நடிகர் கார்த்தி நடிகர் விக்ரம் மற்றும் கமல நடிகர் கமலஹாசன் ஆகிய மூன்று பேரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் ரசிகனாக, இந்த நடிகர்களைப் பார்த்து பொறாமைப் படும் நடிகனாக, ரசிகனாக இந்த படத்தைப் பார்க்கும்போது ஏற்பட்ட மளைப்பு அனைவருக்கும் இருக்கும் என நம்புகிறேன். தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கி விட்டதாக உணர்வு ஏற்படுகிறது.
ஆரோக்கியமான போட்டியும், பொறாமையும் இருக்க வேண்டியதன். இதில் ஓட்டை விழுந்தால் எனக்கும் தோல்விதான். தமிழ் சினிமாவிற்கு 100 வயது. எனக்கு 63 வயது இந்த நல்ல தருணத்தில் இவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் சந்தோஷம். இது ராஜ் கமல் பிலிம்ஸ் என்றில்லை இவர்களுடன் உட்கார்ந்து படம் பார்த்தேன் என்பது மகிழ்ச்சி” எனப் பேசினார்.







