பொன்னியின் செல்வன் – முதல் 3 நாளில் செய்த வசூல் சாதனை

பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. வெளியான மூன்று…

பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. வெளியான மூன்று நாளில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் செப் 30 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் முதல் நாள் மட்டும் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கான முன்பு பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றது.

முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் பலர் முயற்சி செய்த நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வெளியான இரண்டு நாளில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.