ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்-நைஜீரியப் பெண் கைது

ரூ.5,75,000 மதிப்புள்ள கொகைன் போதைப் பொருள் வைத்திருந்த நைஜீரிய பெண் கைது பெண்ணை போலீஸார் கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு தாம்பரம் காவல்…

ரூ.5,75,000 மதிப்புள்ள கொகைன் போதைப் பொருள் வைத்திருந்த நைஜீரிய பெண்
கைது பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜின் உத்தரவின்பேரில் மதுவிலக்கு உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மூன்று
தனிப்படைகள் அமைக்கப்பட்டு தாம்பரம் மாநகரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு
வரப்படுகிறது.

அவ்வாறு பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான
தனிப்படையினர் கானத்தூர் சுங்கச்சாவடி அருகே கண்காணித்து கொண்டிருந்தபோது ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் அங்கிருந்த நபரிடம் ஏதோ ஒரு சிறு பொட்டலத்தை கொடுப்பதை பார்த்த போலீசார் சந்தேமடைந்து அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர்களது விசாரணையில் அப்பெண் நைஜீரிய நாட்டை சேர்ந்த 30-வயதான ஆன்யனி மோனிகா என்பதும் அவர் கடந்த 9 மாதங்களாக சென்னை வேளச்சேரி, பாரதிநகர், கோதாவரி தெருவில் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், போதைப் பொருள்.

மேலும் விசாரணையில் தனது சகோதரரின் புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை அப்பல்லோ மருத்துவமனைக்கு உடன் வந்ததாகவும் அவர் சிகிச்சை முடிந்து நைஜீரியா
சென்றுவிட்டதாகவும் வேலை இல்லாத காரணத்தால் சென்னை வந்து மேற்படி விலாசத்தில் தங்கி நைஜீரியாவில் இருந்து ஒரு நபர் மும்பை கொண்டு வந்து கொடுக்கும் கொகைன் போதைப் பொருளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு கிராம் 2000 ரூபாய்க்கு வாங்கி ஐந்தாயிரத்திற்கு விற்பதாக
கூறினார். பின்னர் அவரது பேக்கை சோதனை செய்ததில் ஒரு கிராம் வீதம் 72 சிறு
சிறு பாக்கெட்டுகள் கொகைன் இருந்ததும், கொக்கைன் விற்ற பணம் ரூ.2,53,000
மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி கானத்தூர் காவல் நிலையத்தில்
ஒப்படைத்துள்ளனர்.

கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நைஜீரியா நாட்டு பெண்ணிடம் தொடர்ந்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.