பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.  சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு…

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். 

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுநீளக் கரும்பு ஆகியவை  ஒரு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜன. 13ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் ஏற்கெனவே அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.