முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமான நிலையில், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முப்பால் கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அரசியல் பிரமுகர்கள் நாள்தோறும் அவரது இல்லத்தில் வந்து துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது தேனி மாவட்ட பாஜக தலைவர் பிசி பாண்டியன், தேனி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் உடன் இருந்தனர்.