நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் எந்தவித களப் பணிகளையும் செய்ய வில்லை. வாக்குப் பதிவின் போதும் வாக்கு எண்ணிக்கையின் போது நடந்த சம்பவங்களை பார்க்கும்போது மக்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது வாக்குகளை மக்கள் பதிய விடாமல் தடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாக்குச்சாவடிகளை கைபற்றி பெற்றுவிடலாம் என்று திமுகவினர் நினைத்திருந்தார்கள். அதற்கு இந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. திமுகவின் கடந்த கால நிகழ்வுகளை பார்த்தால் ஒருபக்கம் எதிர்ப்பார்கள் மற்றொரு பக்கம் ஆதரிப்பார்கள். ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவற்றை முதலில் ஆதரித்தார்கள், இப்போது எதிர்க்கிறார்கள். நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக திமுக தன்னை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு கூறினார்.