முக்கியச் செய்திகள் தமிழகம்

ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது : மா.சுப்பிரமணியன்

2 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள், ஒன்றிய அரசு உத்தரவு அளித்தவுடன் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் கவனிப்பு சிறப்பு பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலக கை கழுவும் தினம் அக்டோபர் 15ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிகழ்வை கோவையில் தொடங்கி வைத்துள்ளோம். சற்றே குறைப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். உப்பு, சக்கரை, எண்ணெய் உணவுகளை குறைக்கும் விழிப்புணர்வு, மற்றும் உபரி உணவுகளை வீணக்கமால் உபயோகப்படுத்த திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம்.

திருமணம், தனியார் நிகழ்வில் மீதமாகும் உபரி உணவை ஆதரவற்ற மக்களுக்கு கொண்டுச்செல்ல, தன்னார்வ ஆர்வலர்களின் உதவியுடன் கைகோர்த்து செயல்படுத்த உள்ளோம். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் விஷம் எனவும் அதை மீண்டும் உபயோகிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணெய்-யை கொள்முதல் செய்து பயோ-டீசல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவு அளித்தவுடன் 2 வயது முதல் 18 வயசுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

Jeba Arul Robinson

பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை!

Hamsa

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: சென்னை காவல் ஆணையரிடம் மனு!

Ezhilarasan