புகையிலை எதிர்ப்புத் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் விழிப்புணர்வு மாரத்தான்!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 6 வயது முதல் 80 வயது வரையிலான ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகம் முழுவதும் மே 31 ஆம் தேதி உலக…

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி பொள்ளாச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 6 வயது முதல் 80 வயது வரையிலான ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

உலகம் முழுவதும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி பொள்ளாச்சியில் தமிழ்நாடு பல் மருத்துவ சங்கம், தடகள சங்கம் மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து புகையிலை எதிர்ப்பு
விழிப்புணர்வு மாரத்தான் நடத்தின.

இதில் 19 வயதிலிருந்து 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்குக்கு 7.5 கிலோமீட்டர் தூரமும் 13 வயதிலிருந்து 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும் 6
வயதில் இருந்து 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்குக்கு 2.5 கிலோ மீட்டர் தூரம் என மூன்று பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது.



பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து புளியம்பட்டி பி.ஏ கல்லூரி வரை நடைபெற்ற போட்டியில் ஆறு வயது சிறுவர் சிறுமியர் முதல் 80 வயது வரை
உள்ள ஆண்கள் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறும்போது உலகம் முழுவதும் புகையிலை பொருட்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதால் மாதம் தோறும் புகையிலைனால்
ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக தெரிவித்தனர்.

மேலும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.

-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.