ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள சுழல் தி வொர்டெக்ஸ் தொடரை பார்த்து ரசிகர்கள் நல்ல கதையம்சம் என பாராட்டி வருகின்றனர்.
புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான ‘சுழல் தி வொர்டெக்ஸ்’ வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மட்டுமல்லாமல் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வெப் தொடரில் பார்த்திபன், பிரதாப் போத்தன், ஐஸ்வர்யா ராஜேஷ் , கதிர், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்யா, பூஜான நடித்த ஓரம் போ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, வ குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இவர்களின் விக்ரம் வேதா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்த தம்பதியினர் தற்போது ‘சுழல்’ இணையத் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். பிரம்மா மற்றும் அனுசரண் முருகையன் உள்ளிட்டோர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரில் 8 எபிசோடுகள் உள்ளன. ஒவ்வொரு எபிசோடும் தலைப்புக்கு ஏற்றவாறு தலையை சுற்ற வைக்கிறது. படத்தின் கதை, விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற 50 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று தொடங்கி நண்பனை காப்பாற்ற பணத்துக்காக என்னவெல்லாம் நடகிறது என்பதை மையமாக வைத்து த்ரில்லிங்காக நகர்ந்து செல்கிறது.
மேலும் கதையின் ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 மணி நேரம் நகரும் இந்த வெப் தொடரை பார்க்கும் பலருக்கு முடிவு என்னவாக இருக்கும் என்பதை எதிர்ப்பார்க்க வைக்கிறது என்றே சொல்லலாம்.. மேலும் பெண்கள் காணாமல் போகும் காட்சிகள் மற்றும் தீ விபத்து ஏற்படும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் மிரட்டி காட்டியுள்ளார். இசையும், கதைக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடரில் முதல் 4 எபிசோடை பிரம்மாவும், அடுத்த 4 எபிசோடை அனுசரணும் இயக்கி உள்ளனர்.
சுழல் – முடிவை நோக்கி ஆவல்
– இரா.நம்பிராஜன்