முக்கியச் செய்திகள் தமிழகம்

“காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யப்படுகிறது” – கர்நாடகா அமைச்சர்

“காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது” என கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஈஸ்வரப்பா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவுக்கும் – தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கர்நாடக மக்களும் – தமிழக மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர். காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இருவரும் கடைப்பிடிக்க வேண்டும். காவிரி பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகின்றனர். காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்சனையே இல்லை.

தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும். காவிரி தூய்மையாக உள்ளது, காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும்.” என்று கூறியுள்ளார்.

madurai
இதனையடுத்து மேகதாது அணை குறித்த கேள்விக்கு ஈஸ்வரப்பா பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ஆற்றில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

Halley karthi

“காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது” – பா.சிதம்பரம்

Saravana Kumar

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Halley karthi