முக்கியச் செய்திகள் சினிமா

கோல்டன் விசா வழங்குவதில் அரசியலா?

ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசாவில் பாரபட்சம் காட்டப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த கோல்டன் விசா வழங்கப்படும் பிரபலங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள், அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம்.

அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் உடன் அழைத்துச் செல்லலாம். ஒரு நாட்டின் குடிமகனுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாகத் தொழில் தொடங்குவது, வேலை பார்ப்பது போன்ற விஷயங்களில் அவர்கள் ஈடுபடலாம்.

 

குறிப்பாக இந்த கோல்டன் விசா நம் நாட்டின் திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தி நடிகர்களான சஞ்சய்தத், ஷாருக்கான், போனிகபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான நடிகை ஜான்வி, அர்ஜூன், குஷி, அன்ஷுலாவுக்கும், சஞ்சய் கபூர், நடிகை ஊர்வசி ரவுடாலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மலையாள திரை நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ், பிருத்விராஜ், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாடகி சித்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை தமிழ்நாட்டைச்சேர்ந்த யாருக்கும் கோல்டன் விசா வழங்கப்படவில்லை. ஐக்கிய அமீரகத்தில் அதிகப்படியாகக் கேரள நாட்டினர் வசிப்பதால், அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கோல்டன் விசா பிரத்தியேகமாக வழங்கப்படுவதாகப் பேச்சு நிலவுகிறது.

மேலும் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஒரு பொருட்டாக ஐக்கிய அரபு அமீரகம் பார்க்கவில்லையா என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. எதிர்காலத்தில் இதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

எனது வெற்றி மாற்று அரசியலுக்கான வெற்றி : சீமான்!

Saravana Kumar

தேசத்துரோக வழக்கில் நடிகை ஆயிஷாவுக்கு முன் ஜாமீன்!

Gayathri Venkatesan

2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

Saravana Kumar