முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்

ஓபன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுகவினுடைய மாவட்ட கழகச் செயலாளர் ஆதிராஜாராம் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட கழகம் செயலாளர் ஆதிராஜானாம் டிஜிபியிடம் புகார் மனு அளிக்க சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் எங்கள் கட்சி அலுவலகத்தை தவறாக உபயோகம் செய்து கொள்ளை அடித்து உள்ளர். அவருக்கு கொடுத்த காவலர்களையும் துஸ்பிரயோகம் செய்து உள்ளார்.


எனவே ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுத்து உள்ள பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும். எதிர்காலத்தில் காவல்துறையை துஸ்பிரயோகம் செய்வார். டிஜிபியிடம் இவருக்கு வழங்கப்பட்டுள்ள காவல் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். அப்படி திரும்ப பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்து உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

EZHILARASAN D

கண்களை கட்டிக் கொண்டு யோகாசனம்; உலக சாதனை புத்தகத்தில் இடம்

G SaravanaKumar

2 குழந்தைகளை கொன்ற தாயை விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Web Editor