முக்கியச் செய்திகள் இந்தியா

லலித் மோடியுடன் நட்புறவில் சுஷ்மிதா சென்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய  லலித் மோடியுடன் தனக்கு இருக்கும் உறவை, முன்னாள் பிரபஞ்ச அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாலத்தீவு, இத்தாலியின்  சார்டினியா தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு தற்போது லண்டன் வந்திருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சுஷ்மிதா சென் தன்னில் பாதி என்றும், இன்னும் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் ஆனால் அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு சுஷ்மிதா சென் பதில் அளிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஷ்மிதா சென், தான் தற்போது மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை, மோதிரம் மாற்றிக் கொள்ளவில்ல என்று தெரிவித்துள்ள அவர், நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் போதுமான விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், எனவே, இனி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வேலையை கவனிக்க வேண்டும் என்றும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.

சுஷ்மிதாவின் இந்த விளக்கத்தை அடுத்து அவரது முன்னாள் காதலரான ரோமன் ஷால் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நேர்மையாக வரி செலுத்துபவர் மஞ்சு வாரியர் – மத்திய அரசு

Vel Prasanth

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றது முதல் நீக்கம் செய்யப்பட்டது வரை…

Nandhakumar

சிறந்த மருத்துவ கல்லூரி; தமிழ்நாட்டில் 2 கல்லூரிகள் சாதனை

G SaravanaKumar