சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்ட பஞ்சாயத்து செய்ததாக வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர் அளித்த புகாரில் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு ரூ.25,000 அபராதம்…

சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கட்ட பஞ்சாயத்து செய்ததாக வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர் அளித்த புகாரில் உதவி ஆணையர் லட்சுமணனுக்கு ரூ.25,000 அபராதம் மனித உரிமை ஆணையம் விதித்தது. இந்த ஆணைய உத்தரவை எதிர்த்து உதவி ஆணையர் தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில், மனித உரிமை மீறல் வழக்கில் சென்னை காவல் உதவி ஆணையருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது, ஒட்டுமொத்த போலீஸ் படையினரையும் ஊக்கக்குறைவுபடுத்த காரணமாகிவிடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.