முக்கியச் செய்திகள் குற்றம்

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 3 டன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 5000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 3 டன் நியாய விலைக் கடை அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசால் மீனவர்களுக்கு மானிய விலையில் ரேசன் அரிசி மற்றும் படகுகளுக்கு மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் அவை கேரளாவிற்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தனிப்படை போலீசார் குளச்சல் அருகே உள்ள குறும்பனை மீனவ கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற சொகுசு காரை சோதனை செய்ய முயன்றனர். அப்போது காரின் ஓட்டுநர் தப்பியோடவே அந்த சொகுசு காரை போலீசார் சோதனையிட்டனர்.

அதில் கேரளாவிற்கு கடத்த 3டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். மேலும் அந்த பகுதியில் கேரளாவிற்கு கடத்த 100-க்கு மேற்பட்ட கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 லிட்டர் மண்ணெண்ணெய்யும் கண்டு பிடித்து சொகுசு காரையும் பறிமுதல் செய்து குளச்சல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடந்து தப்பியோடிய கார் ஓட்டுநர் மற்றும் கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் ரேஷன் பொருள் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?

தாதா சாகேப் விருதை பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன்: ரஜினிகாந்த்

Halley karthi

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் இந்தியாவுக்கு நன்றி!

Halley karthi