ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் டிஜிபி அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மரக்கன்று நட்டு வைத்தார். பின்னர், முதலமைச்சர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் உள்ள டிஜிபியின் அறையை பார்வையிட்டார்.




