தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதனபடி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,390-க்கு, சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளியை பொறுத்தவரையில் கடந்த 5 நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.230-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..




